திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்தும் அரசு மருத்துவமனைகள்  மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவப் சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்கள் 550 பேர் வியாழனன்று (ஏப். 20)  ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.

மருத்துவத்திற்கான  பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இதுவரை தமிழக அரசு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வந்தது. ஆனால் அதனை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. இதனால் மேற்படிப்பு படிக்க உள்ள அரசு மருத்துவர்கள் பொதுவில் போட்டிபோட வேண்டும். எனவே தங்களுக்கு மீண்டும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி காலை 8 மணிமுதல் நன்பகல் 12 மணிவரை நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு  போராட்டத்தில் மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதனால்  புற நோயாளிகளுக்கு முற்றிலுமாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.  சிகிச்சை பெறவந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 12 மணிக்கு பிறகு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர்.

இதே கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மருத்துவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் டாக்டர்ஸ், டாக்டர்ஸ் காஞ்சிபுரம்

Leave A Reply