திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில்  110.5 டிகிரி வெப்பம் பதிவானதால் கடந்த 3 நாட்களாக மாவட்ட மக்கள்  வீடுகளிலேயே முடங்கினர். இதனால், தெருக்கள் அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை  மாவட்டங்களில் இயல்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருவண்ணாமலையில் திங்களன்று 109.2 டிகிரி வெயிலும்,  செவ்வாய்யன்று 110.2 டிகிரி வெயிலும் பதிவானது. புதன் கிழமை 110.5 டிகிரி வெப்பமும் பதிவானது.
சாலைகளில் அனல் காற்று வீசியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. எனவே, தொடர்ந்து  3 ஆவது நாளாக புதன் கிழமையும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

Leave A Reply