சிவகங்கை,
சிவகங்கையில் சிகிச்சைக் வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி உள்ளது.
மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என  அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மானாமதுரையை அடுத்துள்ள ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் மலைச்சாமி என்பவர்  சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
மருத்துவகல்லூரி மருத்துவமனையானது பிரதான சாலையில் இருந்து சற்று தூரம் உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு மலைச்சாமி நடந்துவந்துள்ளார் . பேருந்து நிறுத்தம் அருகே வந்த அவர் வெயிலின் கொடுமை தாங்காமல்  அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

divi theme free download nulled

Leave A Reply