வேலூர்,
தேசிய அளவில் நடைபெறவுள்ள கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் என காட்பாடி செஞ்சிலுவைச் சங்கச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

உலக செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனது பார்வையில் நூற்றாண்டு கடந்த இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்ற தலைப்பில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், எனது அனுபவத்தில் நூற்றாண்டு கடந்த இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தேசிய தலைமையகத்துக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
போட்டிகளின் முடிவுகள் மே 1-ஆம் தேதி அறிவிக்கப்படும். இவ்விரு போட்டிகளில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் தவிர மற்றவர்கள் பங்கேற்கலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply