தருமபுரி,
சாலையோர வியாபாரிகள் தற்போது வியாபாரம் செய்யும் அதே இடத்திலேயே முறைபடுத்தி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் கடைகளை இடமாற்றம் செய்வது காலிசெய்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும், சாலையோர வியாபாரிகள் அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிய பின்பு வியாபாரக்குழுவுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடைபெற்ற இடங்களில் விற்பனைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிகக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராஜன் நிர்வாகிகள் ஜி.வெங்கட்ராமன், ஜி.நாகராஜன், சி.ரகுபதி, செல்வம் ஆகியோர் பேசினர்.
பாப்பாரப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரங்கநாதன் தலைமை வகித்தார். போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம், சங்க நிர்வாகிகள் மனோன்மணி, ராஜசேகர், திருவேங்கடம், பழனியம்மாள் ஆகியோர் பேசினர்.

Leave A Reply