ஒசூர்,
தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (தன்னாட்சி), ஒசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரியுடன் இணைந்து இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இவ்வாண்டும் இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அம்மாவட்டத்தை சேர்ந்த  நாற்பது மாவட்ட மாணவர்களைத் தேர்வு செய்து பதினைந்து நாட்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், சுற்றுசூழல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலைசிறந்த கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களைக் கொண்டு கோடைக்கால சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி எம்.ஜி.ஆர் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஒன்பதாவது பயிலும் அறிவியலில் சிறந்து விளங்கும் இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பெயர், புகைப்படம், பள்ளி மற்றும் வீட்டு முகவரி, தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண், மாணவரைப் பற்றிய தலைமை ஆசிரியரின் கருத்து, பெற்றோர் ஒப்புதல் உள்ளிட்ட விவரங்களை ஒருங்கிணைப்பாளர், இளம் மாணவ விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் 2017, எம்.ஜி.ஆர்.கல்லூரி, அதியமான் கல்வி நிறுவன வளாகம், ஒசூர் – 635130 தொலைப்பேசி எண் 04344-261004, 9976307777 என்ற முகவரிக்கு 20.04.2017 ஆம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply