பேராவூரணி ஏப்.17-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே துறையூர் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலை திருடுபோனது. சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தஞ்சாவூர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்புக் காவல்படையினர் சந்தேகத்தின் பேரில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை புது பாத்திமா நகர் கணேசன் மகன் ரமேஷ் (26) மற்றும் அவரது நண்பர்களான கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன், முருகானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.இதில் துறையூர் முத்துமாரியம்மன் கோயில் சிலையை திருடியது இவர்கள் தான் எனத் தெரியவந்தது.

இதையடுத்து சிலை திருட்டு கும்பலை கைது செய்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன் விசாரணை நடத்தினார். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply