திருவள்ளூர்,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கூட்டம் காலை  11 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகளுக்குத் தீர்வு காணவுள்ளனர்.
எனவே, இம்மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கேட்டுக்கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 21 ஆம்  தேதி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் காலை 10. 30 மணிக்கு  நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்று தங்கள் மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply