நெல்லை:

நெல்லையில் திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பாவூர் சத்திரம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் திங்களன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்வின் போது பட்டாசு வெடி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறிய தீப்பொறி ஒன்று தேவாலயத்தின் முன் கட்டப்பட்டிருந்த பந்தல் மீது விழுந்துள்ளது. இதனை அங்கிருந்த யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பந்தல் முழுவதிலும் தீ பற்றி எரிய துவங்கியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை கட்டுக்கொள் கொண்டுவந்தனர். இதில் 7 இருசக்கர வாகனங்கள் தியில் கருகி சேதமடைந்துள்ளது. இந்ந திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

free wordpress themes

Leave A Reply