காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருப்பூரில் பெண்கள் மீது தடியடி நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீதும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க வட்டத்துணைத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் தேன்மொழி, வட்டநிர்வாகிகள் சசிகலா,ஜோதி,யசோதை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பினர். பின்னர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று விளக்கிப் பேசினர்.

Leave A Reply