உளுந்தூர்பேட்டை,
எரிந்து போன வீட்டிற்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி ஒதுக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் பயனாளிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது.

கிளியூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் கூரைவீடு உட்பட 4 பேரின் வீடுகள் தீவிபத்தில் எரிந்து போனதையொட்டி சிபிஎம் முயற்சியால் 3 பேருக்கு இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கி பயனாளிகளிடம் வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

ஆனால் வீடுகட்ட தேவையான கம்பி மற்றும் சிமெண்ட் வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளனர். இடையில் வீரமணிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ஆளுங்கட்சி  பிரமுகர் தலையீட்டின்பேரில் முறைகேடாக வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டனர்.

எனவே பாதிக்கப்பட்ட வீரமணிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு கட்டுமான பொருட்கள்  கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் கிளியூர் கிளை சார்பில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு ஏப்ரல் 17 திங்களன்று காத்திருப்பு போராட்டம் துவங்கியது.பின்னர் அதிகாரிகள் , போராட்டக்குழுவினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனுவாசன் , நகரச் செயலாளர் கே.தங்கராசு, செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் , கிளியூர் கிளைச் செயலாளர்கள், ஒன்றிய ஆணையர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் தற்போது கட்டுமான பொருட்கள் இருப்பு இல்லாததால் 15 தினங்களில் அரசிடமிருந்து வரவழைத்து தருவது எனவும் மேற்கொண்டு வீடுகட்டப்படுவதற் கேற்ப மீதி பொருட்களை தருவதாகவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் எழுத்து மூலமான உறுதியளித் ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply