காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் திங்களன்று (ஏப், 17) கண்டெடுக்கப்பட்டது. நகரையொட்டி இந்த சடலம் கைப்பற்றப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு கொலையாக இருக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் 30 வயது மதிக்கதக்க சடலம் இருப்பதாக வாலாஜாபாத் காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர்  சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கு வந்த தனிப்படையினர் மற்றும் வாலாஜாபாத் காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக இறந்து போனவர் சென்னை மாநகரை சேர்ந்த வேலு என்பதும் 30 வயது கொண்டவர்  என்றும் தெரியவந்தது. அவரது சட்டைப்பையில் இருந்த ஓட்டுநர் உரிமம் மூலம் இது தெரியவந்தது. மேலும் சடலம் அருகே தொலைப்பேசியின் வயர்கள் மற்றும் சில இரும்பு பொருட்களை காவலர்கள்  கைப்பற்றினர். இறந்த வேலுவின் உடலில் அங்காங்கே காயம் உள்ளதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிபடையினர் விசாரித்து வருகினறனர்.

சமீபகாலமாக காஞ்சிபுரம்  மாவட்டத்தில் கொலைகளும் தற்கொலைகளும் விபத்துகளும் அதிகரித்துள்ளன. கடந்த 15 நாட்களில் 6 கொலைகளும் 6 தற்கொலைகளும் 15 க்கும் மேற்பட்ட விபத்துகளும் நடந்துள்ளன. காவல்துறையினர் அடிக்கடி  ரோந்து செல்லாமல் இருப்பதும், மதுபான கடை பாதுகாப்புக்கு  காவல்துறையினர் சென்றுவிடுவதாலும் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply