அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற கர்பிணிப்பெண் கவுரவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சர்மிளா கர்ப்பாமாகியுள்ளார், அவர் ஏழு மாத கர்ப்பமாகியிருந்த நிலையில் அவரின் கர்ப்பத்தை கலைக்க அவர் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதனை சர்மிளா ஏற்க மறுத்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: