கவுகாத்தி ,

மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெயந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் பாஜக கூட்டணி ஆட்சியில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த எல். ஜெய்ந்தகுமார் உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெய்ந்தகுமாரிடம் மேலும் 3 முக்கிய இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையே சுகாதார நலத்துறை இயக்குனரை மாநில அரசு சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்து இருந்தது. இந்த துறையின் அமைச்சரான ஜெய்ந்தகுமாரை ஆலோசிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தனது அதிகாரத்தில் குறுக்கீடு இருப்பதாக கூறி ஜெயந்தகுமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பைரன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: