எட்டயபுரம், ஏப்.16-
தாமிரபரணி தண்ணீரை பாதுகாக்க வலியுறுத்தியும், கோக், பெப்சிக்கு தடைவிதிக்க கோரியும் எட்டயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கி நூதன பிரச்சாரம் நடந்தது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 70 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்று தண்ணீரை பாதுகாக்க வேண்டும், வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகள் தாமிரபரணியில் இருந்து தினமும் சுமார் 24 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வரலாறு காணாத அளவு தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இந்தச் சூழலில் அனைவருக் கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் எட்டயபுரத்தில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்பொதுமக்களுக்கு தாமிரபரணி தண்ணீரும் துண்டுப் பிரசுரமும் வழங்கி நூதனப் பிரச்சாரம் நடந்தது.

பிரச்சாரத்தை வணிகர் சங்கங்களின் மாநில துணை தலைவர் ராஜா துவக்கி வைத்தார். சிபிஎம் எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தாலுகா குழுஉறுப்பினர்கள் வேலுச்சாமி, நடராஜன், செல்வகுமார், வாலிபர் சங்க பலவேசம், பாலமுருகன், ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply