சிவகங்கை ,

சிவகங்கையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது.  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக கிரிக்கெட் போட்டிகளுக்கு அமைக்கப்படுவதை போன்று பிரம்மாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன . இந்த போட்டியில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன. கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியை கான ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இன்று காலை போட்டியை வேடிக்கை பார்க்க வந்த ஆலங்குடியை சேர்ந்த திருநாவுகரசு என்பவர் காளை முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது பார்வையாளர் பாஸ்கரன் என்பவரும் காளை முட்டியதில் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிங்கப்பூர் இலவச சுற்றுல்லா ,கார், எல்இடி டிவி , பீரோக்கள் என பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் தராததால் காளை உரிமையாளர்களும் மாடு பிடி வீரங்களும் பரிசு பொருட்களை எடுத்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.