சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 700-க்கும் மேற்பட்ட காளைகளும் 1000 மாடு பிடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியை கான ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். இந்நிலையில் வேடிக்கை பார்க்க வந்த ஆலங்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் காளை முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.