சேலம், 
 தமிழக விவசாயிகளை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்று திறனாளி மாணவர்கள் சேலத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கை குறித்து கேட்க கூட பிரதமர் முன்வரவில்லை. இந்நிலையில் விவசாயிகள் எலிகறி உண்ணுதல் தொடங்கி நிர்வாணப் போராட்டம் வரை நடத்தியும் பாஜக அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பாஜக தலைமையிலான மோடி அரசின் மீது கடும் அதிருப்த்தி ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு அமைப்பினர் மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  சேலத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாற்று திறனாளிகள் அமைப்பின் நிர்வாகிகள் ரவிக்குமார், கமலா ராணி தலைமை வகித்தனர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Leave A Reply