சென்னை,
விருதுநகரில் 50 கோடி ரூபாய் செலவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் பல் மருத்துவ பிரிவு நிறுவப்பட்டு, பல் மருத்துவ சிகிச்சைக்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னையில் மட்டும் உள்ளதாகவும் இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், விருதுநகரில் 50 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply