திருப்பூர்: வறட்சி காரணமாக தண்ணீரை தேடி ஊருக்குள் வந்த 5 புள்ளி மான்கள்  வாகனம் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கோதபாளையம் வண்ணத்தங்கரை குளத்தில் அதிகளவில் புள்ளிமான்கள் வருகின்றனர். இந்நிலையில் வறட்சி காரணமாக இந்த குளம் கடந்த சில தினங்களாக வறண்டு காணப்படுகின்றது. இதனையடுத்து வியாழனன்று அப்பகுதிக்கு வந்த 20க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீரை தேடி சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று புள்ளி மான்கள் கூட்டத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 5 புள்ளி மான்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த புள்ளி மான்களை மீட்டு சென்று காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

Leave A Reply