ஒட்டன்சத்திரம், ஏப்.13
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் 2வது பெரிய காய்கறி சந்தையாகும். 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு வரும் காய்கறிகள் கேரள மாநிலத்திற்கு அதிகமாக ஏற்றுமதியாகிறது. தினசரி ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. வியாழனன்று கடையடைப்பு போராட்டத்தையொட்டி விவசாயிகளை காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிற்கும் காய்கறிகள் அனுப்பப்படவில்லை. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக நாங்கள் இந்த கடையடைப்பை நடத்தி எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம் என்று வியாபாரி ஒருவர் கூறினார். இந்த கடையடைப்பை முன்னிட்டு சந்தை வெறிச்சோடி கிடந்தது.

Leave A Reply