புதுதில்லி, ஏப். 13 –
ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதன்படி 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 மற்றும் 28 சதவிகிதம் என நான்கு அடுக்குகளாக வரி விதிக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கு ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் நிதி மசோதாக்களாக அறிமுகம் செய்யப்பட்டன.

அதாவது, மத்திய சரக்கு – சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த துணை மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த 4 துணை மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து ள்ளார். இதனையடுத்து, திட்டமிட்டபடி ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமலாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: