மதுரை,ஏப்.13-
சிபிஎம் கிளைச்செயலாளரைத் தாக்கிய அதிமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் வாடிப்பட்டி ஒன்றியம், திருவேடகம் கிளைச்செய லாளர் பி.அழகு,சோழவந்தான் காவல்நிலைய சார்பு ஆய்வாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி யிருப்பதாவது:

திருவேடகம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை மக்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் திருவேடகம் ஆற்றுப்படுகையில் குளியலறை, கழிப்பறை கட்டு வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 13 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் நடத்திட திட்டமிட்டிருந்தோம். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, மறியல் நடை பெறவிருந்த இடத்திற்கு வந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மணி, என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே தள்ளிவிட்டு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஊராட்சி தலைவர் மணி அதிமுகவின் சசிகலா கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply