கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கடந்த மாதம் 18 தேதியன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்ட தலைவர் ஜேயால் என்பரை பிடித்து காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் தலைக்கவசம் அணியாமல் வந்ததாக கூறி ஜேயலிடம் காவல்துறையினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ஜோயல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றார். இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Leave A Reply