திண்டுக்கல், ஏப்.13-
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எஸ்.கே.நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 300 பெண் கள் உட்பட 400 பேர் கைதாகினர்.

அய்யலூர் சித்துவார் பட்டி அருகே எஸ்.கே.நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அரசு இடம் தேர்வு செய்தது. இந்த பகுதியில் இதுவரை மதுக்கடைகள் திறந்ததில்லை. எஸ்.கே.நகர் பகுதியில் ஏற்கெனவே வழிப்பறிச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய சூழலில் இந்த ஊரில்மதுக்கடை அமைந்தால் ஏரா ளமான குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பாக அமையும் என்று கிராம மக் கள் கருதுகிறார்கள்.  இந்நிலையில் டாஸ் மாக் மதுக்கடை அமைக்கும் அரசின் முடிவுக்கு சுற்றுவட் டாரத்தில் உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் கிராம மக்கள் மனு கொடுத்து, தங்களது ஆட்சேபணையை தெரிவித்தனர். ஆனால் அரசுத்தரப்பில் அந்த பகுதியில் மதுக்கடை அமைக்க மாட் டோம் என்று உறுதியாக பதில் கூறாததால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அய்யலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சித்துவார்பட்டி, பழைய சித்துவார்பட்டி, வடுகபட்டி, பாலகுறிச்சி, பாலகுறிச்சி ஆதிதிராவிடர் காலனி, நொச்சிகுளத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, மலைக்கோட்டை, நாகன்களத்தூர், பாறைகுளம். வெத்தலநாயக்கனூர், கருவார்பட்டி, அய்யலூர் பகுதி மக்கள் பங்கேற்றனர். மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வடமதுரை ஒன்றியச் செயலாளர் டி.முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.குமரவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கே.சம்சுதீன், கண்ணன், சித்துவார்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜமால்முகமது மற்றும் ஜோதிபாசு,குணசேகரன், சுப்ரமணி, அப்துல்நாசர், சி.கண்ணன், எஸ்.முருகன், சி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாசில்தார் வந்து பதில் கூற வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். எஸ்.கே.நகரில் டாஸ்மாக் கடை அமைக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.