தருமபுரி,
கேரளா மாநிலம்,  முன்டாகாயத்தைச் சேர்ந்தவர் பினு. இவர் காரில் தனது குடுபத்தாருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் புதனன்று (ஏப்.12) தருமபுரி மாவட்டம், சேஷம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  கார் நிலைதடுமாறி எதிரே கோவையிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில்  பினு , எதிரே  வந்த காரின் ஓட்டுநர்,  காவிரிப்பட்டணத்தை சேர்ந்த  மாதப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கும், 108க்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்துவந்த காவல்துறையினர் படுகாயமடைந்த  8 பேரை மீட்டு  தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.   இந்த விபத்தில்,  பினுவின் தாயார் வலசம்மாள், உறவினர் ஜான்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave A Reply