திருச்சிராப்பள்ளி, ஏப்.12-
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை உத்தரவாதப் படுத்தக்கோரி ஏப்ரல் கடைசியில் 232 சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தி க்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் களின் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைப்பொது செயலாளர்கள் தேவராஜ், சண்முகம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஹர்சன் சமர்ப்பித்தார்.

தமிழகம் முழுவதும் 9 மையங்களில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் குறித்து முதல் நாள் கூட்டத்தில் பரிசீலி க்கப்பட்டது. இரண்டாம் நாளன்று போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை உத்தரவாதப் படுத்தும் விதமாக மாதத்தின் முதல் தேதியிலேயே ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும் என்றும் அரசையும், நிர்வாகத்தை யும் இக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 232 சட்ட மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அந்தந்த தொகுதி களில் உள்ள ஓய்வுப் பெற்ற அமைப்பு நிர்வாகிகள் மூலமாக கோரிக்கை மனு அளிப்பது எனவும், ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு இயக்கம் நடத்து வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை பல்லவன் சாலையில் உள்ள ஓய்வூதியர் நம்பக அலுவலகம் முன்பு மே மாதம் 2வது வாரத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது என்றும், இதையடுத்து கோரிக்கை மனுவுடன் தமிழக முதல்வர், நிதியமைச்சர் மற்றும் போக்கு வரத்து அமைச்சரை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நடைபெற விருக்கும் 13 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஓய்வுப் பெற்றவர்களின் நிலுவைகளை வழங்கும் விதமாக ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முடிவில் மாநில பொரு ளாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

(ந.நி.)

Leave A Reply