திருச்சிராப்பள்ளி, ஏப்.12-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி முதல் வீதியில் கடந்தசில தினங்களுக்கு முன் டாஸ்மாக் கடை கட்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு டாஸ் மாக் கடை வராது என்று டாஸ்மாக் கிளை மேலாளர் உறுதியளித்ததால் கட்டடம் கட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடைதிறக்கப்பட்டது. இதனையடுத்து இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொன் மலை பகுதிக்குழு, மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் பொதுமக்கள் வெள்ளியன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை திறக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த டாஸ்மாக் கிளைமேலாளர், போலீசார் ஆகியோர் போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்போது இந்த கடையை திறக்கப்பட மாட்டாது எனவும், இந்த கடையை இடம் மாற்றம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து முடிவுக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று காலை டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க மீண்டும் வந்தனர். இதனால் டாஸ்மாக் கடை முன்பு சிபிஎம், வாலிபர், மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரும் டாஸ்மாக் ஊழியர்கள் அங்கேயே காத்திருந்தனர்.

இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் கடையின் வாசலிலேயே சமைத்து சாப் பிட்டு இரவு அங்கேயே தங்கினர். புதனன்று மீண்டும் 11 மணியளவில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு இடமாற்றம் செய் யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன், வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், மணிமாறன், விஜயேந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் ரேணுகா, பொன்மலை பகுதி செயலாளர்கள் புவனேஸ்வரி, பாலமுருகன், முத்துக்குமார், ஜெயந்தி, ராணி, ரயில்வே காண்ட் ராக்ட் சங்க ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply