நீ நீந்தி விளையாடு தம்பி…

இந்த கும்மாளமும்,குதியாளமும்
கும்மரிச்சமும் எவ்வளவு நாள் என
எவருக்கும் தெரியாது.
பணத்தை தண்ணீராய்
செலவழித்த காலம் போய்…….
தண்ணீரை பணமாய் பாதுகாக்கும்
காலம் வெகுதூரமில்லை,..,
கார்ப்பரேட்டுகளின் கண்ணில்பட்டு அவர்கள்
களவாடுவதற்க்குள்..,,.
நீ களமாடிக்கொள்.
தண்ணீருக்காய் கண்ணீர் சிந்தும்
காலம் வரும் …,.
அதுவரை
நீ..நீராடு தம்பி,,. நீயாடு தம்பி,,,.

Mohammed Zakkaria

 

free wordpress themes

Leave A Reply