தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதில் இவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் செவ்வாயன்று இரவு அண்ணாநகர் என்ற பகுதிக்கு சென்று விஜயகுமார் அங்கிருந்த தனது நண்பரான லூக்மான் என்பவரிடம் கஞ்சா கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் லூக்மானுக்கும் விஜயகுமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது லூக்மான் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து விஜயகுமாரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லூக்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply