சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே வைகை ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. ரூ.10 கோடி வரைக்கும் மணல் கொள்ளை நடந்திருக்கிறது என்று இதுகுறித்து கணக்கீடு செய்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மணல் கொள்ளையால் ரூ.100 கோடி மதிப்புள்ள வேதியரேந்தல் அணைக்கு ஆபத்து உள்ளது என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வேதியரேந்தல் பார்த்திபனூர் அணைஅருகேயும், கல்குறிச்சி அருகேயும் அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடக்கிறது. இயற்கை வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரய்யா, ஒன்றியச் செயலாளர் முனியராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் ஆகியோர் வைகை ஆற் றுக்குள் மணல் கொள்ளை நடந்த பகுதிக்கு 5 கி.மீ. தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்தனர்.

லாரி, ஜேசிபி இயந்திரம் செல்ல அங்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணல் ரூ.10 கோடிக்கு மேல் அள்ளப்பட்டுள்ளதை தலைவர்கள் கணக்கிட்டுள்ளனர். வேதியரேந்தல் அணைக்கு அருகே மணல் கொள்ளை நடக்கிறது. இச்செயலால் இயற்கைவளம் கொள்ளை அடிக்கப்படுகிறது. ரூ. 100 கோடி மதிப்புள்ள வேதியரேந்தல் அணையை பாதுகாத்து, மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக வேதியரேந்தல் செல்லத்துரை என்பவர் கூறுகையில், வேதியரேந்தல் கிராமத்தின் சார்பாக பல தடவை மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை. வேதியரேந்தல் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் போலியாக பத்திரம் போட்டு விற்பனை செய்யப்பட்டன. அந்த நிலங் களை மீட்டுக் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே ஆவர். தற்போது வேதியரேந்தல் அணைக்கட்டை பாதுகாக்க மணல் கொள்ளையை தடுக்க சிபிஎம் கட்சியோடு இணைந்து செயல்படுவோம்.

வேதியரேந்தல் முதல் மானாமதுரை வரை சாலை அமைக்க, நடைபயண இயக்கம் நடத்தி சாலை அமைக்க வைத்த இயக்கம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கோடி கோடியாக நடக்கிறமணல் கொள்ளையை தடுத்து அணையை பாதுகாக்க வேண்டும். மேலும் வேதியரேந்தல் அணையில் இருக்கிற பூங்காவையும் சிறப்புற செயல் படுத்திட வேண்டும் என்றார். சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றிலிருந்து ஒன்றரைக்கோடி லிட்டர் தண்ணீர் தினமும் 20 லட்சம் மக்களுக்கு கிடைக்கிறது; அப்படிப்பட்ட வைகையில் மணல் கொள்ளை நடக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூறினர்.

38 குடிநீர் திட்டங்கள் இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரைக்கும் வைகை ஆற்றுக்குள் 38 குடிநீர் திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்திலிருந்து ஒன்றரை கோடி லிட்டர் குடிநீர் எடுத்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 20 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டனர். வைகை ஆற்றிலிருந்து மதுரை, அருப்புக்கோட்டை, கடலாடி, திருப்புவனம், சிவகங்கை, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, கீழப்பசளை, இடைக்காட்டூர், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, தூதை, வயல்சேரி, மடப்புரம், கானூர், கண்ணாயிருப்பு, கட்டனூர், வெள்ளிமுஞ்சி, மீனாட்சிபுரம், பச்சேரி, வேம்பத்தூர், மாரநாடு, சுள்ளங்குடி, ஆவரங்காடு, விளத்தூர், குவளவேலி, பாப்பாகுடி, கீழமேல்குடி, தீத்தான் பேட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினர்.

ஆற்றில் நீர் வள ஆதாரமாக உள்ள மணலை அள்ளுவதால், 350 அடிக்கு கீழே நிலத்தடி நீர்போய்விட்டது. இக்காரணங்களால் குடிதண்ணீர் விநியோகம் குறைந்துவிட்டது. குறிப்பாக மானாமதுரை பேரூராட்சிக்கான குடிநீர் திட்டம் ராஜகம்பீரம் அருகே வைகை ஆற்றில் உள்ளது. இங்கே மானாமதுரை பேரூராட்சிக்கு மட்டும் 10 போர்வெல் , 8 திறந்தவெளிக் கிணறு மூலம் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒருநாளைக்கு எடுக்கப்படுவதாக திட்டம் உள்ளது. ஆனால் தற்போது மானாமதுரை குடிதண்ணீர் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மானா மதுரை நகரில் இரு தினங்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் ஆகிக் கொண்டிருக்கிறது. இதே போன்ற நிலைதான் அனைத்து குடிதண்ணீர் திட்டங்களிலும் உள்ளது. எனவே வைகையில் மணல் அள்ளாமல், அவற்றை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் அவர்கள் கூறினர். இதுபற்றி சிவகங்கை கோட் டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
– ஜே.ஆர்.

Leave a Reply

You must be logged in to post a comment.