வேலூர்,
மூன்று சக்கர பைக், இலவச வீடு வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம், அம்முண்டியை சேர்ந்த மாற்றுத் திறனாளி எம்.ராதா (38)  கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தந்தையை இழந்து, வயதான தாய் துணையுடன், முதியோர் ஓய்வூதியத் தொகை மூலம் வாழ்ந்து வருகிறோம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கூறி, கடந்தஆண்டு செப்டம்பர் மாதம் என்னை அணுகிய மூவர், குடியிருக்க இலவச வீடு, மூன்று சக்கர பைக் வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 87,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து கடந்த மார்ச் 20-ஆம் தேதி குறைதீர் முகாமில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.