சண்டிகர்,

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரிக்குள் புகுந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சியும், தடியடி நடத்தினர். அப்போது பல மாணவர்களை சூழ்ந்து கொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இத

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து ஸ்டூடண்ட்ஸ் பார் சொசைட்டி என்ற மாணவ அமைப்பினர் விடுத்த அழைப்பின் பேரில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்குள் நுழைந்த  காவலர்கள் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும் , தண்ணீரை பாய்ச்சியும் மாணவர்களை கலைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். அந்த சம்பவத்தின் போது மாணவ அமைப்பின் தலைவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குருத்துவாராவில் தஞ்சம் அடைந்தனர். போராட்டம் கலைக்கப்பட்ட பின்னர் குருத்துவாராவில் தஞ்சம் அடைந்த மாணவர் தலைவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: