நெல்லை:

நெல்லை அருகே உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு மாடி வணிக வளாகத்திற்கு நகரமைப்பு திட்டகுழுமம் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே முருகன்குறிச்சி என்ற இடத்தில் நான்கு மாடிகள் கொண்ட வி.வி.டவர்ஸ் என்ற வணிக வளாகம் இயங்கி வந்தது. இந்த வணிக வளாகத்தில் 48 கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வணிக வளாகம் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டுப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த நெல்லை நகரமைப்பு திட்டக்குழும அதிகாரிகள், விதிமீறல்களை கண்டறிந்தனர். இதனையடுத்து வணிக வளாகத்தில் உள்ள பொருட்களை அகற்றி மூட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் வணிக வளாகத்தில் உள்ள 48 கடைகள் தொடர்ந்து செயல்பட்டன. இதனைத்தொடர்ந்து திங்களன்று காலை அங்கு வணிக வளாகத்திற்கு சென்ற அதிகாரிகள் நான்கு மாடிகள் கொண்ட வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் கடைகளுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனர்.

Leave A Reply