புதுக்கோட்டை, ஏப்.11-
புதுக்கோட்டை மாவட் டம், கந்தர்வக்கோட்டை அருகே புதுநகர் பகுதியில் வேன் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே தாழம் பட்டியை சேர்ந்தவர்கள் லாரி மூலம் 45-பேர் அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றனர். பின்னர், திங்கள் மாலை பிள்ளைவயலில் இருந்து, தஞ்சாவூரை நோக்கி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மாலை 6.30 மணியளவில், லாரி கந்தர்வக்கோட்டை புதுநகர் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே, தஞ்சையில் இருந்து, கந்தர்வக்கோட்டையை நோக்கி வந்த டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே லாரியில் வந்த தாழம்பட்டியை சேர்ந்த கவியரசன்(15), மகேந்திரன்(15), மாரிமுத்து(30), ராமராஜன்(35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பல்லடத்தை சேர்ந்த சஞ்சீவி(25) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் படுகாயத்துடனும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், 108 ஆம்புலன்ஸ் வருவது, காலதாமதம் ஆனதை கண்டித்து, இறந்து போனவர்களின் உறவினர்கள், தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியலில் இறங்கினர். இதனால், ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கந்தர்வகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave A Reply