புவனேஸ்வர்,

ஒரிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்துக் கடவுள் குறித்து பேஸ்புக்கில் எதிர்மறையான கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரிசாவில் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் , இது போன்ற கருத்துகளை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பத்ரக் நகர காவல் நிலையம் முன் கடந்த வியாழனன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் போது கடைகளை அடித்து நொறுக்கியும் , டயர்களை கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கலவரத்தை சங்பரிவார் அமைப்பினர் மாவட்டம் முழுவதும் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நிலைமை கட்டுக்கடாங்கமால் போனதை தொடர்ந்து பத்ரக் மாவட்டத்தில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலும் சங்பரிவார் அமைப்பினர் பல பகுதியிகளில் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக 1000-த்திற்கும் அதிகமான ரிசர்வ் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பத்ரக் நகரத்திற்கு நுழைவு வாயில்கள் அனைத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் , 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.