புதிய இந்தியா
நாளும் பொறக்குது
மலக்குழி சாவுல
நாடே நாறுது!
நாலு வர்ண
சாதிக்கொரு
நீதி வைச்சு
மேல் என்றும்
கீழ் என்றும்
தள்ளி வைச்சு
பூணுலால் கட்டப்படுது
புதிய இந்தியா!
இது…
யோகியும், காவியும்
ஆளும் காலம்
இனி…
இந்துவும்
இந்தியுமே
புதிய இந்தியா!
நீயென்ன
உண்ண வேண்டும்
உடுத்த வேண்டுமென
மட்டுமல்ல
இதை தான்
சிந்திக்க வேண்டுமெனவும்
நிர்ணயிக்கப்படுவாய்!
மாட்டை தெய்வமாக்கி
மனிதனை அடிமைபடுத்தும்
நாட்டிலே…
மாடுகளுக்காக
மனிதர்கள் வேட்டையாடப்படுவார்கள்!
மண்ணையும்
மனிதத்தையும்
நேசிப்பவர்களை
தேச துரோகிகளாக்கி
தேசபக்தியின் பேரால்
தேசமே விற்கப்படும்!
விவசாயி உயிரையும்
தொழிலாளி உழைப்பையும்
நாட்டின் வளத்தையும்
உறிஞ்சி…
ஜோரா ஒளிருது
கார்பரேட்களின்
புதிய இந்தியா!
பிரசாந்த்-வெள்ளளூர்

Leave a Reply

You must be logged in to post a comment.