வேலூர்,
கோடை காலங்களில் ஏற்படும் தோல் நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து என மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் உறுப்பினரும், பாரம்பரிய சித்த வைத்திய சங்க மாநிலத் தலைவருமான கே.பி.அர்ஜூனன் குறிப்பிட் டார்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் கள விளம்பரத் துறை சார்பில், கோடை காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்று தடுப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற  கே.பி.அர்ஜூனன் பேசுகையில்,  “கோடை வெயிலினால் அம்மை, வயிற்று வலி, உடல் சூடு, தோல் நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனைப் போக்க குளிர்ந்த பழ வகைகள், நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். அம்மை நோய் ஏற்பட்டால் பச்சை வாழைப் பழம், கேழ்வரகு கூழ், வெங்காயம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் அம்மை நோயைப் போக்க முடியும்” என்றார். மேலும் கோடை காலங்களில் தண்ணீரில் பன்னீர் கலந்து குளித்தால் நோய் தாக்காது. கோடை காலங்களில் ஏற்படும் தோல் நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து என்றும் அவர் கூறினார்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி, மாவட்ட கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.