தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே வறட்சியின் காரணமாக பயிர் வாடுவதை கண்ட விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ராஜ். இவர் வங்கியில் நகைக்கடன் பெற்று  விவாசயம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் நகையை திருப்ப இயலாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயி ராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ராஜ்ஜின் மகன் அந்தோணிராஜூம் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.