ஷில்லாங்,
மேகாலயாவில் மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி 16 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டாக   பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் தொடர்புடைய 2 இளைஞர்கள், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 5 சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.