திருச்சிராப்பள்ளி, ஏப். 6 –
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், குளத்துக்காரம்பட்டியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் பார்வையிட்டனர்.

ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண் டுக்கல், தேனி, அரியலூர், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 424 காளைகள் பங்கேற்றன. இதில் 4 22 காளைகள் ஜல்லிக்கட்டிற்கு அனுமதிக்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவக்குழுவினர் அனைத்துக் காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை அடக்கும் வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் 301 வீரர்கள் சீருடைகளுடன், காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் காளைகளை அடக்கும் போது சில வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப் பட்டன.

Leave A Reply