ஈரோடு:

ஈரோடு அருகே மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்துள்ள சிவகிரி பகுதியை சேர்ந்த மோகன். இவர் கூலி தொழில் செய்து வருகின்றார். இவரது 13 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இந்த சிறுமி புதனன்று பள்ளி முடிந்தும் வீட்டுக்குச்  செல்லாமல் பள்ளியிலேயே இருந்துள்ளார்.  இதனை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் அச்சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது கடந்த 6 மாதங்களாக தனது தந்தை, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும், பாலியல் பலாத்காரம் செய்தும் வந்துள்ளதாகக் சிறுமி கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து சைடு லைன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்துள்ளனர்.

Leave A Reply