குஜராத் பாணியில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது கள்ள நோட்டு அச்சடித்தும் சேர்ந்திருக்கிறது.
கறுப்பு பணத்தை ஒழிப்பதாகவும், கள்ளப்பணத்தை கொண்டு வரப்போவதாகவும் கூறி பிரதமர் மோடி இரவோடு இரவாக ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதனை தொடர்ந்து ரூ 2000 ஆயிரம் ரூபாய் வெளியிடப்பட்டது. அப்போது இந்த ரூபாய் நோட்டை யாரும் அவ்வளவு எளிதில் போலியாக அச்சிட முடியாது. அதில் சிப் இருக்கிறது ஜிபிஎஸ் இருக்கிறது என கூறினார். ஆனால் அதில் ஒன்றுமில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியான சில மணி நேரங்களிலேயே அரசு அடித்து வெளியிட்டதை விட தெளிவாக கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளிவந்திருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் 22,677 போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரீஜூ நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசும் போது தெரிவித்தாவது, நாடு முழுவதும் 28,000 போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 22,677 போலி 2000 நோட்டுகள் பிடிபட்டுள்ளன. நாடு முழுவதும் பிடிபட்ட போலி 2000 ரூபாய் நோட்டுகளில் 95 சதவீதம் குஜராத் மாநிலத்தில் மட்டும் பிடிபட்டுள்ளது. அதேபோல 500 ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் குஜராத்தில் இருந்துதான் பிடிபட்டுள்ளது. அதன்படி, 8,720 போலி 500 ரூபாய் நோட்டுகள் குஜராத்தில் இருந்து மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
போலிகளை உருவாக்குவதில் தொடர்ந்து மோடி வழியில் குஜராத் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply