நாகப்பட்டினம், ஏப். 5 –
மகாத்மா காந்தி, தேசிய 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு, 5 மாதங்களுக்கு மேலாக இன்னும் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்; தேவூர் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் எல்லாம் குடிநீர்பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. 100 நாள் வேலையை 200 நாளாக்க வேண்டும், தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தித் தர வேண்டும் விவசாயத் தொழிலாளர் மற்றும் வேலையற்று நலிந் திருப்போர் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கி, தாமதப்படுத்தாமல் உடனடியாக ஊதியம் வழங்கிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாட்டியக்குடி மற்றும் தேவூர் ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாட்டியக்குடியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.முத்தையன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் கோரிக் கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.என்.அம்பிகாபதி உட்பட ஏராளமான பெண்கள் போராட் டத்தில் பங்கேற்றனர். 300-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தேவூர் :தேவூர்க் கடை வீதியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் (பொ) வி.அமிர்தலிங்கம் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

Leave A Reply