தில்லி ,

தில்லியில் போராடி வரும் விவசாயிகள் திடீரென மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி , விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 23 நாட்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கை கால்களை கட்டிக்கொண்டு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய போது விவசாயி அய்யாக்கண்ணு மயக்கமடைந்தார். மேலும் சில விவசாயிகளுக்கு வாந்தி , மயக்கம் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.