தீக்கதிர்

நில மோசடி வழக்கில் காசா கிராண்ட் கட்டுமான உரிமையாளர் கைது

சென்னை ,

நில மோசடி வழக்கில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தன் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தன். இவர் சென்னை திருவான்மியூர் உள்ளிட்ட பிரதானப் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக , அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் 200 பேர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அனிருந்தனை இன்று கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.