தஞ்சாவூர்,
புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தையே அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுதும் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அறைகூவல்
விடுத்திருந்தது.
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்திவிட்டது. ஆயினும்  இதுநாள்வரையிலும் தமிழக அரசு அதனை அமல்படுத்தவில்லை. அதனை
அமல்படுத்திடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் அறிக்கையைப் பெற்று உடனடியாக ஊதியத் திருத்தம் அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியர்களுக்கும் செய்திட வேண்டியிருக்கிறது. அதனை 2016 ஜனவரி முதல் அமல்படுத்திட வேண்டும். அதனை அமல்படுத்தும்வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் அளித்திட வேண்டும். கம்யுடேசன் காலத்தை மீண்டும் 12 ஆண்டுகளாகக் குறைத்திட வேண்டும்.
அதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியத்தொகையை 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.  மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் அளித்திட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு தமிழகம் முழுதும் இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும். மருத்துவ சிகிச்சை திட்டத்தை மற்ற மாநிலங்களைப் போல அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 13 கோரிக்கைகளை வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் மாவட்ட ஆட்சியல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். கலியமூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர். ராஜகோபால் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் ஆழி.இராம.அரங்கராசன் உரையாற்றினார்கள். பின்னர் மாவட்ட நிர்வாகிகள் ஆர். கலியமூர்த்தி. ஆர். ராஜகோபால், பூபதி, மாநில செயற்குழு உறுப்பினர் சுத்தானந்தம், வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முதலானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துவிட்டு வந்தனர்.
(ந.நி.)

Leave A Reply