தஞ்சை ,

தில்லி மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் வணிக சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் , வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 21 நாட்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் , காவிரி தீர்ப்பாயத்தை கலைக்க கூடாது என வலியுறுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த 7 நாட்களாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் இன்று முழுவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் முழுவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வணிக சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக  பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டு உள்ளன.

Leave A Reply