புவனேஸ்வர்,

ஒரிசா மாநிலத்தில் பிரதமர் மோடி  வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ரயில் நிலையத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி  நடக்கும் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி , அமித் ஷா , சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டொய்கலு ரயில் நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் மோடியில் கொள்கைகளை எதிர்பதாகவும் , அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: