மத்திய அமைச்சர்களின் வாக்குறுதிக்குப் பின்னும் மீனவர் மீது தொடரும் தாக்குதல்
நிரந்தர தீர்வுகாண சிஐடியு கோரிக்கை

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வின் மாநிலத் தலைவர் ஜி.செலஸ்டின், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்கள் பல்வேறு போராட் டங்களை நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த6ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ என்பவர்இலங்கை கடற்படையால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து இராமேசுவரம் மற்றும் நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் இராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்அமைப்பினர் தில்லி சென்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசி னர். அப்போது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மத்திய அமைச்சர்களும் மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், இனிமேல் இலங்கை கடற்படையினர் தாக்குதல் இருக்காது என்ற உறுதியை வழங்கினர்.மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனால் மீனவர்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று மாலை சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடித்துக் கொண்டி ருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்தனர். மேலும் அவர்கள், மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை எடுத்து சரமாரியாக வீசினர். இதில் சில மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்.இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசரம் அவசரமாக வலைகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவிலேயே மீன்கள் எதுவும் பிடிக்காமல் கரை திரும்பினர்.இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 12 பேரும் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டனர்.மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாக்குறுதி அளித்த மார்ச் 21-ம் தேதி முதல் இன்றுவரை ஒருவார காலத்திற்குள் 6 படகுகளும் 38 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களின் 143 படகுகள் இலங்கை வசம் உள்ளன.தொடரும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். எனவே மாற்று வாழ்வாதார திட்டம் குறித்து மத்திய அரசு விரைந்து முடிவு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடல் வளத்தை அழிப்பதை முற்றிலும் தடுக்க மாநில அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply